சருமத்தின் அழகை இயற்கை வழியில் அதிகரிக்க உருளைக்கிழங்கு உதவும். எப்படி?

 
Published : May 10, 2018, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
சருமத்தின் அழகை இயற்கை வழியில் அதிகரிக்க உருளைக்கிழங்கு உதவும். எப்படி?

சுருக்கம்

Potato helps to enhance the natural beauty of the skin. How?

சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமென்று ஆசைபடுபவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். 

அப்படி பயன்படுத்துவதால், சருமத்தின் அழகானது அதிகரிப்பதற்கு பதிலாக, சருமத்தில் பிரச்சனைகள் தான் அதிகரித்திருக்கும். 

எனவே எப்போதும் சரும அழகை அதிகரிப்பதற்கு ஆசைப்படுபவர்கள் இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

ஆம்... இயற்கை வழிகளால் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் சரும அழகை அதிகரிக்க முடியும். அதிலும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை எளிதில் அதிகரிக்கலாம்.

இங்கு உருளைக்கிழங்கைக் கொண்டு சருமத்திற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்றும், அதனால் சருமத்தின் அழகு எவ்வாறெல்லாம் அதிகரிக்கும் என்று பார்ப்போம்.

** பொலிவான சருமத்தைப் பெற… 

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

** வறட்சியான சருமம் நீங்க… 

சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி, அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் 2 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

** சரும அழுக்குகளை நீக்க… 

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின் அதில் 1 முட்டை, சிறிது தயிர் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் நன்கு கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

** இளமைத் தோற்றத்தை தக்க வைக்க… 

உருளைக்கிழங்கை அரைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

** முகப்பரு தழும்புகளை மறைக்க… 

எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அதனை சருமத்தில் தடவி, நன்கு உலர வைத்து, முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசி, பின் குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

** கண்களின் சோர்வை நீக்க… 

உருளைக்கிழங்கு துண்டுகளை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும் போது செய்தால், கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.

** கருவளையத்தை போக்க… 

உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்தால், உருளைக்கிழங்கில் உள்ள நொதியானது கருவளையத்தைப் போக்கும்.

** சரும சுருக்கங்களைப் போக்க… 

தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, முகப்பரு, சரும நிற மாற்றம் போன்ற அனைத்தும் நீங்கிவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க