
இயற்கை கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் – 700 மி.லி
பூண்டு – 1/4 கப்
வெங்காயம் – 1/4 கப்
மிளகு – 2
இஞ்சி– 1/4 கப்
முள்ளங்கி – 2
மஞ்சள் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் பூண்டு, இஞ்சி, வெங்காயம் மற்றும் முள்ளங்கி ஆகிய அனைத்தையும் சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நறுக்கிய அனைத்து பொருட்களுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, அதனை வடிகட்டி, அதில் ஆப்பிள் சீடர் வினிகரை நன்றாக கலக்க வேண்டும்.
அதன் பின் இந்த கலவையை ஒரு இருளான இடத்தில் வைத்து, 2-6 வாரங்கள் வரை வைத்து, அதன் பின் வடிகட்டி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, இந்த மருந்தில் ஒரு ஸ்பூன் எடுத்து குடித்தால், காய்ச்சல், இருமல் மற்றும் சளி தொல்லையில் இருந்து குணமாகுவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குறிப்பு
இது மிகவும் காரத்தன்மை மிகுந்த சக்தி வாய்ந்த மருந்தாக இருப்பதால், இதை உபயோகிக்கும் முன் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியமாகும்.