மாதத்திற்கு ஒருமுறை மட்டும் முள்ளங்கி ஜூஸைக் குடித்தால் இவ்வளவு நன்மைகள் வாழ்க்கை முழுவதும் கிடைக்கும்...
முள்ளங்கி ஜூஸில் உள்ள சத்துக்கள்
முள்ளங்கி ஜூஸில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு போன்றவை வளமாக உள்ளது.
** முள்ளங்கி ஜூஸ் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள், வைரஸ்கள் போன்றவற்றை வெளியேற்ற உதவும்.
** கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் நொதிகளின் வெளியீட்டிற்கு உதவும்.
** முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
** கல்லீரலில் உள்ள அதிகப்படியான அளவில் இருக்கும் பிலிரூபினை வெளியேற்றி, மஞ்சள் காமாலையில் இருந்து முள்ளங்கி ஜூஸ் விடுவிக்கும்.
** முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது.
** முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
** முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.