சோற்றுக் கற்றாழை ஜூஸை இப்படி குடித்தால் உங்களை எந்த வியாதியும் அண்டாது...

First Published Jul 7, 2018, 1:40 PM IST
Highlights
If you drink almond juice juice you will not have any disease ...


சோற்றுக் கற்றாழை ஜூஸை குடிக்கும் முறை

20 மி.லி. கற்றாழை ஜெல்லை எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இப்படி குடித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

** மஞ்சள் காமாலையை தடுக்கும் :

வயது ஏற ஏற ஜீரண மண்டலத்தில் பிரச்சனைகள் உண்டாவது நமக்கு புலப்படுகிறது. ஆனால் நீங்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்துக் கொண்டு வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும்.

** ரத்த சோகை :

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்தி பாருங்கள். ஆச்சரியப்படும்படி மாற்றம் உண்டாகும். அதுமட்டுமல்லாது கல்லீரல் நோய்கள், என பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

** ஹார்மோன் ஒழுங்குபடுத்தும் :

ஹார்மோன் சம நிலையில்லாமல் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை சீர்படுத்துகிறது.

** சருமத்திற்கு ஏற்றது :

கற்றாழை ஜூஸ் குடித்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு போடுவதை விட இரு மடங்கு அழகை தரும். உள்ளிருந்து ஊட்டம் அளித்து உங்களை இளமையாக்கும்.

** நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் :

அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருக்காது. அவர்கள் இந்த ஜூஸை குடித்தால் பலனை கண்கூட பார்க்கலாம். உயர் ரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்.


 

click me!