சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் - இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்...

First Published Jul 6, 2018, 2:31 PM IST
Highlights
This is the reason for kidney stones - it can be avoided if done correctly ...


சிறுநீரகக் கல் 

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகல் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகல் மூலம் குணப்படுத்துகிறார்கள்.

அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.

சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகல் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.

முன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கல் ஏற்படுவதை தடுக்க முடியும். 


 

click me!