
நமது உடலில் ஓய்வில்லாமல் கடிகாரம் போல் இயங்கும் உறுப்புக்களில் இதயமும் ஒன்று. இந்த இதயத்தைத் தாக்கும் மாரடைப்பானது (Heart Attack) உயிரைப் பறிக்கக் கூடிய அபாயகரமான நோயாகும்.
உங்கள் தலை முடி பழுப்பு நிறத்தில் இருந்தால் மாரடைப்புக்கு வரும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள பல்கலைகழக பேராசியர்கள் நடத்திய ஆய்வில் பழுப்புநிறத் தலைமுடி ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
டிஎன்ஏ குறைபாடு, மன அழுத்தம், உடலுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதது, புகைப்பிடித்தல் ஹார்மோன் மாற்றம், பரம்பரை பாதிப்பு போன்றவற்றினால் செல்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதால் தலைமுடியும் பாதிக்கப்படுகிறது.
தலைமுடியின் நிறமானது பழுப்பாக மாறும்போது நமது இதயத்தில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக்குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளும் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்று இந்த ஆய்வின் மூலம் எச்சரிக்கப்பட்டு உள்ளது.