மக்களே உஷார்! கோடைக்காலத்தில் உருவாகும் கண்கட்டியை அலட்சியமாக எண்ண வேண்டாம்...

 
Published : Apr 27, 2018, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
மக்களே உஷார்! கோடைக்காலத்தில் உருவாகும் கண்கட்டியை அலட்சியமாக எண்ண வேண்டாம்...

சுருக்கம்

Do not be indifferent in the summers eyes ...

கண்கட்டி 

கோடைக்காலத்தில் கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். இதனால், வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும்.

கண்கட்டி காரணம் என்ன? 

இதற்கு உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு. சுகாதாரம் இல்லாமல் இருப்பது பல காரணங்கள் இவ்வாறு கண்கட்டி உருவாவத்ற்கு காரணம். தொற்றினாலும் உண்டாகும். சிலருக்கு அதில் நீர் கசிந்துகொண்டேயிருக்கும். 

இதற்கான தீர்வுகள் என்ன?

** தனியா விதை : 

தனியா விதை கைப்பிடி எடுத்து 20 மி.லி நீரில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் வெதுவெதுப்பாகியதும் வடிகட்டி , அந்த நீரினால் கண்களை கழுவலாம். தினமும் 3 முறை செய்து பார்த்தால் பலன் தெரியும்.

** கொய்யா இலை : 

கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள்.

** உருளைக் கிழங்கு தோல் : 

பலரால் உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பலன் தெரியும்.

** உப்பு : 

உப்பை வெறும் வாணிலியில் சூடுபடுத்தி அதனை ஒரு துணியினால் கட்டி கண்கள் மீது ஒத்தடம் வைக்கவும். அல்லது வெதுவெதுப்பான நீரில் உப்பை கரைத்து அதனைக் கொண்டு கண்களை கழுவலாம்.

** வேக வைத்த முட்டை : 

முட்டையை வேக வைத்து ஓட்டை பிரிக்காமலேயே கண்கள் மீது பொறுக்கும் சூட்டில் வையுங்கள். 5 நிமிடம் இப்படி செய்தால் வலி குறைந்து குணமாகும்.

** பாலாடை : 

பாலாடை எடுத்து அதனை கண்கள் மீது பூசுங்கள். காய்ந்ததும் பாலினால் கண்களை துடைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி