மின்சாரம் தாக்கியவருக்கு இந்த முதலுதவியை செய்தால் உடனே காப்பற்றாலாம்; தெரிஞ்சுக்குங்க உதவும்... 

 
Published : Feb 28, 2018, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
மின்சாரம் தாக்கியவருக்கு இந்த முதலுதவியை செய்தால் உடனே காப்பற்றாலாம்; தெரிஞ்சுக்குங்க உதவும்... 

சுருக்கம்

If the first aid to the power surgeon can be immediately secured Help you

நமது வீட்டின் சமையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரம்தான்.  மின்சாரத்தின் தாக்கம் என்பது எத்தனை அளவு வோல்ட்டேஜ் உள்ளது என்பதைப் பொருத்தும், நமது உடலில் பாயும் மின்சாரத்தின் மின்தடை திறனை வைத்தும் தான் ஆபத்துக்கள் அமைகிறது.

ஆனால் குளியல் மற்றும் சமையல் இதுபோன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் அதிகமாக இருக்கும்.

எனவே மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும்.

மின்சாரம் தாக்கியவருக்கு முதலுதவி செய்வது எப்படி?

** மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்துக் கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். 

** அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.

** உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, நீண்ட உலர்ந்த மரக் கம்பு அல்லது கயிறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.

** இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். 

** சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி