வாய்ப் புண்ணால் அவதியா? இதோவாய்ப்புண்ணை போக்க சில எளிய வழிகள்…

 
Published : Jun 14, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
வாய்ப் புண்ணால் அவதியா? இதோவாய்ப்புண்ணை போக்க சில எளிய வழிகள்…

சுருக்கம்

How to solve mouth ulcer

 

வாயின் கொப்புளங்கள் உண்டாகி அவதிப்பட்டீங்களா? அப்படி உண்டாவதைத்தான் ‘வாய்ப்புண்’ (MOUTH ULCER) என நாம் அழைக்கிறோம். இதனை போக்க சில எளிய வழிகள்.

சமையல் சோடா:

இது பேக்டீரியாவை அழிக்க உதவுவதுடன், புண்ணையும் போக்குகிறது. இது எரிச்சலை குறைக்கசெய்யவும் உதவுகிறது. மேலும் இது கிருமிகளையும், பாக்டீரியக்களையும் அழிக்கிறது

செய்முறை

ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை ½ கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை கொண்டு உங்கள் வாயினை கழுவ வேண்டும். ஆம், கழுவும் பொழுது தண்ணீரினை உங்கள் வாயின் நாளாப்புறமும் சுழற்றி, கொண்டுசென்று அதன் பின் துப்புவது மிகவும் முக்கியம். இதேபோல் ஒரு நாளைக்கு இரணடு முறை செய்து வர உங்கள் பிரச்சனைகள் நீங்கும்.

துளசி இலைகள்:

துளசி இலையை மென்றுவர…உங்கள் வாய்ப்புண் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். முதலில் துளசி இலையை நன்றாக மென்று அதன் பின் தண்ணீர் குடிக்க உங்கள் பிரச்சனை நீங்கும். இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை, பல பிரச்சனைகளுக்கு தீர்வாக நமக்கு அமைகிறது. ஒரு நாளைக்கு 3லிருந்து 4 முறை சில துளசி இலைகளை மென்று அதன் பின்னர் தண்ணீர் குடித்துவர, வாய்ப்புண் பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும்.

தேன்:

உங்கள் புண் மீது 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனோடு கலந்து…பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பூச வேண்டும். உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவேண்டுமென்றால்…மஞ்சளை தேனுடன் கலந்து தேய்க்க வேண்டும்.

மோர்:

மந்திர மூலப்பொருளான இந்த மோர், புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. இந்த மோரில் லாக்டிக் அமிலம் இருப்பதுடன், இயற்கையிலே சற்று அமிலமும் கலந்துள்ளது. இது புண்ணால் ஏற்படும் வலியை குறைக்க வல்லது.

சீமைச்சாமந்தி:

இந்த மலர் கிருமி நாசினி பண்புகளை கொண்ட ஒரு மலராகும். பொதுவாக வாயை கொப்புளிக்க பயன்படுத்தபடும் இந்த மலர், வாய்ப்புண்ணையும் ஆற்ற வல்லது. உங்கள் கைகள் நிறைய சீமைசாமந்தி மலர்களை எடுத்துகொள்ளுங்கள். அதனை தண்ணீரில் போட்டு…ஒரு நாளைக்கு இரண்டு முறை வாயை கழுவி வாருங்கள். இதன் பண்புகள் வாய்ப்புண்ணை நீக்கி வாய்பிளந்து ஆச்சரியத்துடன் உங்களை நிற்க வைக்கும்.

தேயிலை:

மற்றுமொரு தற்காலிக தீர்வாக இந்த முறை இருக்கிறது. வளிமண்டலத்தில் ஒரு ஈரமான டீ பேக்கை வைக்க வேண்டும். டேன்னின் எனப்படும் ஒன்று, பிளாக் டீ யில் இருக்கிறது. இந்த டீ பேக்கில் இருக்கும் பவுடரை கொண்டு வலிக்கான நிவாரணத்தை நாம் பெறலாம் என்கின்றனர்.

கொத்துமல்லி தழை:

கை முழுக்க கொத்துமல்லி தழையை எடுத்துகொள்ள வேண்டும். அதனை நன்றாக நசுக்கிகொள்ள வேண்டும். அந்த ஜூஸை, வாய்ப்புண் குறைய நாம் குடித்துவர..புண் நீங்கி விரைவில் பயன் தருகிறது. அதேபோல், கொய்யா இலைகளை நன்றாக நசுக்கி, ஜூஸாக்கி வாய்ப்புண்ணுக்காக குடித்துவர, அது உங்கள் புண்ணை விரைவில் போக்கி நலம் பெற உதவுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!