எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம். எப்படி?

Asianet News Tamil  
Published : Feb 17, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம். எப்படி?

சுருக்கம்

How to cure stitches without side effects

 

எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்...

உடலின் வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்ற கோடுகள் காணப்படும். அது தான் ஸ்ட்ரெட்ச் மார்க். இந்த தழும்புகள் பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் வரும். 

ஏனெனில், கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். 

அதே நிலை தான் குண்டாகி, ஒல்லியானவர்களுக்கும். இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். 

சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, செய்து பாருங்களேன்…

** உடற்பயிற்சி

உடற்பயிற்சியை வைத்தே ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் சருமத்திற்கு சரியான ஒருவித பயிற்சியை கொடுப்பதால், அந்த பயிற்சியால், சருமத்தில் இருக்கும் அந்த ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய ஆரம்பிக்கும்.

** ஆரோக்கிய உணவுகள்

உணவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி, ஈ சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் புதிய திசுக்கள் வளர்ச்சியடைவதோடு, பாதிக்கப்பட்ட திசுக்களும் சரியாகும். அதுமட்டுமின்றி ஜிங்க் சத்துள்ள உணவுகளான நட்ஸ் மற்றும் விதைகளையும் சேர்க்க வேண்டும். மேலும் வைட்டமின் கே உள்ள உணவுகளான பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால், பழுதடைந்த திசுக்கள் குணமடைந்து, தழும்புகள் மறைந்துவிடும்.

** கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள நொதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.

** லாவெண்டர் ஆயில்

ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருள் என்றால், அதில் லாவெண்டர் ஆயிலும் ஒன்று. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.

** நறுமணமிக்க எண்ணெய்கள்

அவோகேடோ, பாதாம் மற்றும் ஜோஜோபா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தினால், அவை ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.

** கொக்கோ வெண்ணெய்

பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?