Tamil

அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்

Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

அன்னாசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் இது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.

Image credits: Getty
Tamil

செரிமானத்தை மேம்படுத்தும்

அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. இது புரதங்களை உடைத்து, வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

Image credits: Getty
Tamil

உடல் எடையைக் குறைக்க உதவும்

இதில் கலோரிகள் குறைவு, நீர்ச்சத்து அதிகம். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், உடல் எடையைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

மாதவிடாய் வலியை குறைக்கும்

அன்னாசி பழம் சாப்பிடுவது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடலில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உதவும் என கூறப்படுகிறது.

Image credits: Getty
Tamil

சருமத்தை பாதுகாக்கும்

இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் புரோமெலைன் என்சைம் உள்ளது. இவை இரண்டுமே சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty

Immunity Foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவுகள்!

Women Health : பெண்களை அதிகம் பாதிக்கும் 5 பொதுவான மனநலப் பிரச்சினைகள்!

Parotta Tips : பூ மாதிரி சாஃப்ட்டா பரோட்டா செய்வது எப்படி?

Heart Health: மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் 7 உணவுகள்!