Green Tea For Weight Loss : க்ரீன் டீ குடிக்க 'சரியான' வழி இதுதான்! எடை மளமளவென குறையும்! ஆனா 'இப்படி' மட்டும் குடிக்காதீங்க

Published : Jan 02, 2026, 11:43 AM IST
green tea for weight loss

சுருக்கம்

உடல் எடையை குறைக்க க்ரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும்? எப்படி குடிக்க கூடாது? க்ரீன் டீ தயாரிக்கும் சரியான முறை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

கிரீன் டீ உடல் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால் தான் உலகளவில் கிரீன் டீ ஆரோக்கியமான எடை குறைப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், எடையை குறைக்க கிரீன் டீயை பலரும் அளவுக்கு அதிகமாக குடிக்கிறார்கள். அது தவறு. எடை இழப்பிற்கு கிரீன் டீ யை எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்? எப்போதெல்லாம் குடிக்க கூடாது? க்ரீன் டீ தயாரிக்கும் சரியான முறை என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

கிரீன் டீயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

கிரீன் டீயில் பிற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளான புரதச்சத்து, கொழுப்பு கார்போஹைட்ரேட், கலோரிகள் ஆகியவை ஏதும் கிடையாது. ஆன்டி மைக்ரோஃபியல் பண்புகள், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் கொண்ட கேட்டிசின் என்னும் மூலப்பொருள் தான் க்ரீன் டீயில் அதிகமாக இருக்கின்றது.

இது தவிர கிரீன் டீயில் காஃபைன் குறைந்த அளவில் உள்ளன. மேலும் குடலுக்கு நன்மை பயக்கும் ப்ரோ பயோடிக் பண்புகள் கிரீன் டீயில் அதிக அளவில் இருக்கிறது. மக்னீசியம், வைட்டமின் பி, ஃபோலேட், பிளவனாய்டுகள் மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கிரீன் டீயில் அதிகமாக இருக்கின்றது.

கிரீன் டீ எடையை எப்படி குறைக்கிறது?

கிரீன் டீ ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு அற்புதமான பானமாகும். இதில் கலோரிகள் கிடையாது. இவற்றில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் கலந்து கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களில் உடலில் தூண்டும்.

எடையை குறைக்க கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்?

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கிரீன் டீ யை உடற்பயிற்சிக்கு பிறகு குடிப்பது நல்லது. அதுபோல ஒரு நாளைக்கு 2-3 கப் வரை கிரீன் டீ குடிப்பது போதுமானது. இதுவே உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து உடல் எடையை குறைக்க உதவும்.

கிரீன் டீயை எப்போதெல்லாம் குடிக்க கூடாது?

- கிரீன் டீயை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒருபோதும் குடிக்கவே கூடாது. இப்படி குடித்தால் வாயு தொல்லை, அசிடிட்டியை ஏற்படுத்தும்.

- உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீ பலரும் குடிக்கிறார்கள். இது உணவை வேகமாக செரிக்க செய்து எடையை குறைக்க உதவும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய தவறு. சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடித்தால் அது நம் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை சேர்த்து ஜீரணித்து கழிவாக வெளியேற்றும். எனவே இனி இந்த தவறை செய்யாதீங்க.

- இரவு படுக்கைக்கு செல்லும் முன் கிரீன் டீ ஒருபோதும் குடிக்காதீர்கள். இது மூலிகை சுறுசுறுப்பாக்கி தூக்கத்தை கெடுக்கும்.

- மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் கிரீன் டீ குடிக்க கூடாது.

கிரீன் டீ தயாரிக்கும் சரியான முறை :

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஓரளவு சுடு ஆறியதும் அதில் 1 ஸ்பூ கிரீன் டீயை சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்கவும். பின் ஒரு நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?