
கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கு அதிகளவு ஜங்க் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை காரணம்.
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இல்லாவிட்டால், அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அதில் முக்கியமாக இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய் வரும். அதுமட்டுமின்றி புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது.
உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மாத்திரை போட்டு அலுத்து போயிருந்தால், அதற்கு நல்ல தீர்வு அளிக்கும் ஓர் இயற்கை வழி ஒன்று உள்ளது.
அது என்ன?
தேவையான பொருட்கள்:
பூண்டு – 4-5 பற்கள்
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி
இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும்.
தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டி, அத்துடன் சிறிது தேன் கலந்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் சாப்பிட வேண்டும்?
இந்த மருந்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து காலை உணவு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், 2 வாரத்தில் கொலஸ்ட்ரால் குறைந்திருப்பதைக் காணலாம்.