இந்த இரண்டு பொருள்களை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்...

 
Published : May 14, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
இந்த இரண்டு பொருள்களை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்...

சுருக்கம்

This substance is prepared from the tapioca and heals the ulcer ......

கறிவேப்பிலை மற்றும்  வெந்தயம் கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

தலைமுடி பிரச்சனையை சரிசெய்ய, தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.  

அதன்படி, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து தினமும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. 

கறிவேப்பிலை நன்மைகள்: 

* கறிவேப்பிலையில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடி உதிர்ந்து மெலிவதைத் தடுக்கும். 

* கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். 

* கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவித்து, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.

தேவையான பொருட்கள்: 

கறிவேப்பிலை – 10-20

வெந்தயம் – 2 ஸ்பூன் 

தேங்காய் எண்ணெய் – 1/2 கப் 

ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன் 

தயாரிக்கும் முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறியதும், அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து பயன்படுத்த வேண்டும்.

இந்த எண்ணெயின் நன்மைகள்: 

* இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்ய உதவும். 

* ஸ்கால்ப்பை வறட்சியின்றி பார்த்துக் கொள்ளும். 

* தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். 

* தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். 

* முடி வெடிப்பைத் தடுக்கும் 

* நரைமுடியைத் தடுக்கும். 

* பொடுகைப் போக்கும். 

* ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யும்.

PREV
click me!

Recommended Stories

உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
Skipping Exercise : வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங்.. எடை குறைப்பு முதல் நன்மைகளோ கோடி!!