Belly Slimming: பிரசவத்தின் பிறகு அதிகரிக்கும் தொப்பையை குறைக்க எளிய வழி இதோ உங்களுக்காக!

Published : Feb 04, 2023, 04:20 PM IST
Belly Slimming: பிரசவத்தின் பிறகு அதிகரிக்கும் தொப்பையை குறைக்க எளிய வழி இதோ உங்களுக்காக!

சுருக்கம்

பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு, தொப்பை வந்து விடும். அதிலும் குழந்தைப் பெற்ற பிறகு தான் இது அதிகமாக நடக்கிறது. இந்தத் தொப்பையைக் குறைப்பதற்கு எளிய முறையில், வீட்டிலேயே ஒரு பொடியை தயார் செய்து பயன்படுத்திப் பாருங்கள். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைக்கு பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே இந்த தொப்பை தான். தொப்பையால், சிலர் குண்டாக இருப்பது போன்ற தோற்றத்தைப் பெறுகின்றனர். இதனை எப்படியாவது குறைக்க வேண்டும் என அனுதினமும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். மேலும், தொப்பை அதிகமாக இருப்பதனால், அது ஆரோக்கிய குறைப்பாட்டை உண்டாக்கி விடும். பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு, தொப்பை வந்து விடும். அதிலும் குழந்தைப் பெற்ற பிறகு தான் இது அதிகமாக நடக்கிறது. இந்தத் தொப்பையைக் குறைப்பதற்கு எளிய முறையில், வீட்டிலேயே ஒரு பொடியை தயார் செய்து பயன்படுத்திப் பாருங்கள். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

தொப்பையைக் குறைக்க

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 50 கிராம் அளவு சீரகத்தை வறுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக வாசனை வரும் அளவிற்கு வறுத்த பிறகு, ஒரு தட்டில் இதனை கொட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, 50 கிராம் ஓமத்தை எடுத்து, நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து விட்டு, தட்டில் மாற்றிக் கொள்ளவும். அடுத்து 25 கிராம் கருஞ்சீரகத்தையும் நன்றாக வறுத்து தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுத்து 20 கிராம் ஏலக்காய் மற்றும் 50 கிராம் அளவு சுக்குப் பொடியை வறுத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் சிறிதளவு பசு நெய்யை சேர்த்து, 20 கிராம் பெருங்காயத்தை வறுத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனோடு 50 கிராம் அளவு கருப்பட்டி பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். கருப்பட்டிக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்க்க வேண்டாம். இந்தப் பொடியை காற்று போகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

Black colour Fruits: உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த 7 கருப்பு பழங்களை சாப்பிடுங்கள்!

எப்படி பயன்படுத்த வேண்டும்?

நாம் தயாரித்து வைத்துள்ள பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கொதித்ததும் ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அல்லது காலை 11 மணியளவில் அல்லது இரவு தூங்கப் போவதற்கு முன்பாக குடிக்கவும். இதனைத் தொடர்ச்சியாக 15 நாட்கள் குடித்து வந்தால், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள், அடிவயிற்றில் இருக்கும் தொப்பை என அனைத்தும் காணாமல் போய் விடும். மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி, தொப்பையை மிக எளிதாக நம்மால் குறைக்க முடியும்.

PREV
click me!

Recommended Stories

Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!
Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை