பல் வலியை போக்கி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பரான டிப்ஸ் இதோ... 

 
Published : Jul 03, 2018, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:36 AM IST
பல் வலியை போக்கி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பரான டிப்ஸ் இதோ... 

சுருக்கம்

Here are tips on how to keep your teeth healthy and healthy.

பல் வலி ஏற்படாமல் இருக்க பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கி கொள்வதை சுத்தம் செய்யாமல் விட்டால் அது கிருமிகள் அதிகரிக்க செய்து, பல் வலி உண்டாக காரணியாக அமையும். எனவே, பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பல்லுக்கு அடியில் வெங்காயம்!

உங்களுக்கு பல் வலி ஆரம்பத்தில் தான் இருக்கிறது என்றால், பல்வலியை போக்க வெங்காயத்தை மென்று வந்தால் போதுமானது.

வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு அடியில் ஒருசில நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தின் ஜூஸ் மெல்லே, மெல்ல இறங்கி, பல் வலியில் இருந்து குணமடைய செய்யும்.

தாங்காத பல் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போது உங்களுக்கு இது சிறந்த தீர்வளிக்கும். ஒரு வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு கீழே வைத்தால் பல் வலி குறையும்.

கிராம்பு எண்ணெய்!

இந்த வெங்காய சிகிச்சைக்கு அடுத்து, கிராம்பு எண்ணெய்யை கூட பல்வலி போக்க பயன்படுத்தலாம்.பஞ்சை 2-3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலை இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால் போதும். நல்ல நிவாரணம் பெறலாம்.

வெள்ளரிக்காய்!

வெங்காயத்தை போலவே, வெள்ளரிக்காய் ஸ்லைஸ் அறுத்து அதை பற்களுக்கு அடியில் வைத்தாலும் பல் வலி குறையும்.

இஞ்சி!

பல் வலி மிகுதியாக இருந்தால் இஞ்சியை சிறு துண்டாக அறுத்து, அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வந்தால் வலி குறைய உதவும்.

டீ பேக்!

சூடான டீ பேக்கை பல் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் போல கொடுத்தால் பல் வீக்கத்தை குறைக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!