
உணவு, ஆக்சிஜன் பயன்பாடு, சூரியக் கதிர்வீச்சு, மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் ஃப்ரீ ராடிக்கள்ஸ் (Free radicals) உருவாகிறது. இந்த ஃப்ரீராடிக்கள்ஸ் உடலில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை வெளியேற்றி, செல்களை பாதுகாப்பவற்றை ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்று சொல்கிறோம்.
உணவுகளில் உள்ள ஆக்சிஜனேற்ற பாதிப்பை தவிர்க்கும் திறனை ஆக்சிஜன் ரேடிக்கல் அப்சர்பன்ஸ் கெபாசிட்டி (Oxygen radical absorbance capacity) என்பர்.
எலக்ட்ரானை இழந்த செல்களுக்கு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்னிடம் உள்ள எலக்ட்ரானை அளித்துப் பாதுகாக்கிறது. மிகக் குறைந்த காலத்திலேயே இளமை தோற்றத்தை இழக்கும் பிரச்சனையை ஆன்டிஆக்ஸிடன்ட் தடுக்கிறது.
காய்கறி, பழங்களைக் காட்டிலும், மசாலாப் பொருட்களில்தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
அதன்படி கீழவரும் இந்த ஏழு பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமுள்ளது.
1.. கிராம்பு 2.. சீரகம் 3.. மஞ்சள் 4.. கோகோ 5.. பட்டை 6.. உலர்ந்த மல்லி தழை 7.. இஞ்சி.
இந்த பொருட்களை பயன்படுத்தி உங்கள் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் லெவலை அதிகரிக்கலாம்.