நறுமணம் வீசும் வெட்டிவேரில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் இதோ...

Asianet News Tamil  
Published : Dec 14, 2017, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
நறுமணம் வீசும் வெட்டிவேரில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் இதோ...

சுருக்கம்

Here are the medical qualities contained in a scented bowl ...

பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

அது வெட்டிவேரில் நடக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டிவேர் நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.

வெட்டி வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.

வெட்டிவேரின் மருத்துவ பயன்கள்

காய்ச்சல், வயிறு எரிச்சல் போன்றவற்றிர்க்கு சுகமளிக்கிறது. வெப்பம் தணிக்க பசையாக பூசலாம். 

இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.

வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சி உண்டாகும்.

கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.

இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்கும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.

கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

வேரிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெயினை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake