முட்டைகோஸ் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ…

 
Published : May 29, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
முட்டைகோஸ் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ…

சுருக்கம்

Here are the benefits of eating cabbage.

1.. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.  கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.  இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

2.. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

3.. சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

4.. வியர்வைப் பெருக்கியாக செயல்படும்.  சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

5.. எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

6.. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

7.. நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

8.. தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

9.. முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

10.. உடல் சூட்டைத் தணிக்கும்.  நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும்.  குடல் சளியைப் போக்கும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!