அரைக்கீரையின் அற்புத குணங்கள் இதோ…

 
Published : Jun 02, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
அரைக்கீரையின் அற்புத குணங்கள் இதோ…

சுருக்கம்

Here are the amazing qualities of araikeerai

வீடுகளில் அடிக்கடி சமைக்கும் கீரைகளில் ஒன்றான அரைக்கீரையின் அற்புத குணங்கள்:

1.. இன்றையச் சூழலில் பெரும்பாலானோர் வாயு தொடர்பான பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால், அரைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், வாயு தொடர்பான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நம்மை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும். 

2.. அரைக்கீரையுடன், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து புளி சேர்க்காமல் கடைந்து சாப்பிட்டால் வாயு தொடர்பான தொல்லைகள் உடனடியாகத் தீரும். 

3.. கிருமி தொற்றுகளால் ஏற்படும் தொண்டைப்புண், இருமல், சளிப்பிடிப்பு போன்றவற்றிற்கு அரைக்கீரை சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது. 

4.. ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகி உடல் பலவீனமாக இருப்பவர்கள் அன்றாடம் உணவில் அரைக்கீரையைச் சேர்த்துக்கொண்டால் உடல் பலம் பெறுவதுடன், இழந்த தெம்பும் திரும்ப வரும். 

5.. காய்ச்சல் காரணமாகவோ, வயிறு கோளாறு காரணமாகவே சில வேளைகளில் நாக்கு அதன் ருசி தன்மையை இழந்துவிடும். அந்த சமயங்களில் அரைக்கீரையுடன் புளி சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நாக்கு இயல்பான நிலைக்குத் திரும்பும். 

6.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது வளம் பெறும். இளம் வயதில் பல்வேறு காரணங்களால் ஆண்மைத் தன்மை இழப்பிற்கு பலர் ஆளாகிறார்கள். அவர்கள், இந்தக் கீரையைத் தொடர்நது சாப்பிடுவதன் மூலம் இழந்த ஆண்மைத் தன்மையை மீண்டும் பெற முடியும்.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி