Gooseberry: தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ!

By Dinesh TG  |  First Published Dec 30, 2022, 1:20 PM IST

நெல்லிக்காயில் கொட்டிக் கிடக்கும் வேறுசில நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.


உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்ட ஓர் கனி என்றால் அது நெல்லிக்கனி தான். நெல்லிக்காயின் சுவை சற்று புளிப்பாக இருப்பதனால், பலரும் இதனை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு நெல்லிக்காயில் உள்ள சத்துக்களும், ஒரு ஆப்பிளில் உள்ள சத்துக்களும் ஒரே அளவு தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இதுதவிர, நெல்லிக்காயில் கொட்டிக் கிடக்கும் வேறுசில நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அருமருந்தான நெல்லிக்காய்

Tap to resize

Latest Videos

நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை நம் உடலில் உண்டாகும் பல விதமான நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆகிய இரு மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லிக்காயின் பயன்கள்

  • நெல்லிக்காய் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
  • நாம் சாப்பிடக் கூடிய உணவுகளில், சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
  • தினந்தோறும் காலையில் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

வட இந்திய ஸ்டைலில் ஆரோக்கியமான "வெஜ் சப்ஜி" ! இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க!

  • நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும், இது இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் உதவி புரிகிறது.
  • தினசரி தேனில் ஊறவைத்த நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், உடலில் புதிய இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆகும்.
  • நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி ஆனது, அதிக கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமின்றி, இதயம் சார்ந்த பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
  • ஆகவே, இனி தினந்தோறும் நெல்லிக்காயை ஒதுக்கி விடாமல், அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மையைத் தரும்.

நெல்லிக்காய் பொடி

தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மை அளிக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

20 மி.லி. அளவு நெல்லிக்காய் ஜூஸை சூடான தண்ணீரில் கலந்து, வெறும் வயிற்றில் காலை வேளையில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் ஊறுகாய்

சந்தையில் நெல்லிக்காயை வாங்கி, ஊறுகாய் செய்தும் சாப்பிட்டு வரலாம். இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஓர் உணவாக இருக்கிறது.

click me!