கோடைக் காலத்தில் சூட்டை தணித்து குளுமையாக இருக்க உதவும் சில இயற்கை ஆரோக்கிய குறிப்புகள் இதோ...

 
Published : Apr 28, 2018, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
கோடைக் காலத்தில் சூட்டை தணித்து குளுமையாக இருக்க உதவும் சில இயற்கை ஆரோக்கிய குறிப்புகள் இதோ...

சுருக்கம்

Here are some natural wellness tips that can help you cool down in the summer.

கோடை காலத்தில் உடல் சூட்டை தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகி, உடல் சோர்வு அதிகரிக்கும். 

மேலும், இதன் காரணத்தால் உங்கள் செயற்திறன் மற்றும் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து காணப்படும். 

உடல் சூட்டை தணிக்க உதவும் சிறந்த இயற்கை மருத்துவ குறிப்புகள் 

1.. மாதுளை பழசாற்றுடன் கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் உடல் குளுமையாகும்.

2.. நொச்சி இலைகளாய் பனை வெல்லத்துடன் சேர்த்து இரண்டு டம்ளர் நீருடன் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

3.. செவ்வந்திப்பூ கசாயம் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

4.. விளக்கெண்ணையுடன் துண்டுதுண்டாக அறுத்த பேயன் வாழைப்பழம் மற்றும் பனகற்கண்டு சேர்த்து, நன்கு ஊறிய பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

5.. கள்ளிமுளையான் தண்டுப்பகுதியை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி அடையும்.

6.. சாதம் வடித்த கஞ்சியுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

7.. செம்பருத்தி, சீரகம், நெல்லிவற்றலுடன் நீர் சேர்த்து இரவு முழுதும் ஊற வைத்து, பிறகு அடுத்த நாள் அந்த நீரை குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

8.. வெந்தயத்தை வறுத்து, வறுத்த கோதுமை சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.


 

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!