உங்களுக்கு தெரியுமா? சீரகம் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது...

First Published Apr 27, 2018, 1:53 PM IST
Highlights
Do you know Cumin contains powerful antioxidant ...


புற்றுநோயை தடுக்கும் அற்புத தேநீர்

மஞ்சள், பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த தேநீர் புற்றுநோய் வருவதை விரட்டும்.

இந்த தேநீரை குடிப்பதால் புற்று நோயை விரட்டலாம். வராமலெயே தடுக்கலாம். அதோடு பல்வேறு உபாதைகள் குணப்படுத்தலாம். 

தேவையானவை :

மிளகு – 4

பாதாம் பால் – 1 கப்

மஞ்சள் – அரை ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்

தேநீரை தயாரிக்கும் முறை: 

முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். 

பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். 

வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.

நன்றாக கொதித்து பொங்கும்போது, குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். 

பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள். 

வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். 

இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைகக்கும்.

சேர்க்கப்படும் பொருள்களினால் கிடைக்கும் மருத்துவ பலன்கள்...
பாதாம் பால் :

பொதுவாக தேநீரை பாலில் தயாரிப்பது வழக்கம். ஆனால் இங்கே பாதாம் பால்தான் தேநீர் தயாரிக உபயோகப்படுத்தப் போகிறோம். பாதாம் பால் சர்க்கரை வியதியை தடுக்கும். முதுமையை தடுக்கும், புற்று நோயை தடுக்கும்.

சீரகம் :

சீரகம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நோயை தடுக்கும். கல்லீரல் மற்றும் ஜீரண பாதையை வலுப்படுத்தும். புற்று நோய் செல்களை அழிக்கும்.

பெருஞ்சீரகம் :

இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. சீரகத்தின் குடும்ப வகை செடியாகும். இது முற்றிலும் புற்று நோயை அளிக்கக் கூடியது.

மஞ்சள் :

மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. அதோடு புற்று நோயை வரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் உடலிலுள்ள கிருமித் தொற்றை அழிக்கும்

click me!