சிலவகை சிறுதானிய பயிர்களும் அவற்றின் அதிஅற்புத மருத்துவ குணங்களும் இதோ...

Asianet News Tamil  
Published : Dec 07, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
சிலவகை சிறுதானிய பயிர்களும் அவற்றின் அதிஅற்புத மருத்துவ குணங்களும் இதோ...

சுருக்கம்

Here are some kinds of small crops and their high quality medicinal properties.

1.கம்பு

அடங்கியுள்ள சத்துக்கள் : 

புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள்: 

உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.  வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது

தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்

2.சோளம்

அடங்கியுள்ள சத்துக்கள்: 

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து
                                                    
மருத்துவ பயன்கள்: 

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.
                                                 
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட்,சோள பிஸ்கட், ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

3.கேழ்வரகு

அடங்கியுள்ள சத்துக்கள்: 

புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ், இரும்புசத்து முதலியன உள்ளன.
                                                                              
மருத்துவ பயன்கள்: 

சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.
                                                                    
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

கேழ்வரகு களி, கேழ்வரகு மால்ட், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!