அன்றாட உடற்பயிற்சியுடன், தொப்பை, உடல் பருமனைக் குறைக்கும் சில ஆயுர்வேத வழிகள் இதோ…

 
Published : Sep 14, 2017, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
அன்றாட உடற்பயிற்சியுடன், தொப்பை, உடல் பருமனைக் குறைக்கும் சில ஆயுர்வேத வழிகள் இதோ…

சுருக்கம்

Here are some Ayurvedic ways to reduce belly and obesity with daily exercise.

இந்த டிப்ஸை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணர முடியும்.

தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வழிகள்…

நெல்லிக்காய் சாறு

தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

அருகம்புல் சாறு

அருகம்புல் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பானை போன்று வீங்கியுள்ள தொப்பை குறையும்.

திரிபலா

ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைகளில் கொடுக்கப்படுவது தான் திரிபலா பொடி. இந்த பொடியானது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை பொடியாக்கி செய்யப்படுவதாகும். இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் பருமன் குறையும்.

பாதாம் பொடி

காலை உணவிற்கு பின் பாதாம் பவுடரை தேன் கலந்து சாப்பிட்டு வர, உடல் பருமன் குறையும்.

ஆமணக்கு வேர்

ஆமணக்கு வேரை நன்கு இடித்து, நீரில் போட்டு, தேன் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி கீரை

அடிக்கடி கரிசலாங்கண்ணி கீரையை பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.

சோம்பு

சோம்பை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி தினமும் அந்நீரைக் குடித்து வந்தால், உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

கேரட் மற்றும் தேன்

கேரட் ஜூஸில் தேன் கலந்து குடித்து வந்தால், கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, தொப்பை குறையும்.

வாழைத்தண்டு ஜூஸ்

வாழைத்தண்டு ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறையும்.

எலுமிச்சை மற்றும் மிளகு

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, தொப்பை குறையும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க