எண்ணெய் பசை உள்ள முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க இதோ ஐந்து இயற்கை வழிகள்…

First Published Aug 1, 2017, 12:55 PM IST
Highlights
Here are five natural ways to brighten up the face with oil glue ...


சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.

1,. 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டும்.

2.. 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

3.. 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

4.. 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.

5.. ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக அகலும்.

click me!