உங்களுக்குத் தெரியுமா? கட்டுக் கோப்பான உடல் அமைப்பு பெற உலர் திராட்சை மிகவும் சிறந்தது…

 
Published : Jul 31, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கட்டுக் கோப்பான உடல் அமைப்பு பெற உலர் திராட்சை மிகவும் சிறந்தது…

சுருக்கம்

Do you know Wine is very good for the body

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும்  இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.      

உலர் திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால் ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால் இதை எடுத்துக் கொள்ளலாம்.

விளையாட்டு வீரர்கள் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப்பொருள். இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலைத் தருவதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராசையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றை கிரகிக்க உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில் அதிக அளவில் பொட்டாசியம் தாதூஉப்பு இருப்பதால், இரத்தக் குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து நிறைவாக உள்ளது. இது இரத்த செல்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருப்பதால் இரத்தசோகைக்கான வாய்ப்புக் குறைகிறது.

இயற்கை முறையில் உலர வைக்கப்பட்ட திராசையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர்திராட்சையை வாங்குவதை விட நடுத்தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!