சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் போனால் ‘எல்லாமே’ கஷ்டம் தான்..!!

By Asianet TamilFirst Published Feb 25, 2023, 12:55 PM IST
Highlights

ஒவ்வொரு நாளும் உடலுக்கு புரதம் மற்றும் நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. அது குறிப்பிட்ட நாளில் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் உங்களது வாழும் நாட்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர் என்று அர்த்தம்.
 

நேரத்துக்குச் சாப்பிடாவிட்டால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று வீட்டில் நம்முடைய அம்மாக்கள் எப்போதும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் மருத்துவ ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது, அது உண்மை தான் என்று தெரியவருகிறது. அந்த வகையில் நேரத்துக்கு சாப்பிடாமல் போனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

காலையில் உணவைத் தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். மேலும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நாம் அனைவரும் பிஸியான வாழ்க்கையை கடந்து செல்கிறோம். பலர் அவசரம் காரணமாக காலை உணவை கூட தவிர்த்து விடுகின்றனர். சரியான நேரத்தில் உணவு உண்ணவில்லை என்றால், அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

உணவைத் தவிர்ப்பது கோபத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும். இது காலப்போக்கில் தீவிரமான நடத்தை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவைத் தவிர்ப்பது ஒருவருக்கு சோர்வை ஏற்படுத்தும், மேலும் இது தலைச்சுற்றல் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதை எப்போதும் உறுதி செய்யுங்கள். 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் இளநீரை குடிப்பது நல்லது- ஏன் தெரியுமா?

ஒருவேளை நீங்கள் நேரம் கடந்து உணவு சாப்பிட வேண்டிய தேவை வந்தால், உலர் பழங்கள், நட்ஸ் உள்ளிட்டவற்றை கைகளில் வைத்துக்கொள்ளுங்கள். பசிக்கும் போது சாப்பிடுங்கள். உணவைத் தவிர்ப்பது உடலில் புரதச் சத்து குறைவதற்கு வழிவகுக்கும். புரதம் ஒரு முக்கியமான மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும், இது தசை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உடல் திசுக்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இதுதொடர்பாக தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை ஆய்வு சார்ந்த தகவலில், 60 சதவீத பெரியவர்கள் குறைந்தபட்சம் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர் அல்லது வழக்கமான நேரத்தில் சாப்பிடுவதில்லை என்று தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாளும் இப்படி செய்வது உடல் இயக்கத்தில் பெரும் வேறுபாட்டை ஏற்படுத்தும். அன்றைய நாளின் தொடக்கத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய காலை உணவில், உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைய உள்ளன. அவை தினந்தோறும் உடலுக்கு புரதம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி கிடைப்பதை உறுதி செய்கிறது. 

click me!