Coconut Water: தினந்தோறும் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

By Asianet Tamil  |  First Published Feb 9, 2023, 6:48 PM IST

தேங்காய் தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா ன? எனக் கேட்டால் பலரும் இல்லை என்று தான் சொல்வார்கள். இருப்பினும், தேங்காய் தண்ணீரை குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்‌. ஏனெனில், அந்த அளவிற்கு அற்புத நன்மைகள் தேங்காய் தண்ணீரில் நிறைந்துள்ளது. 


காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே போல, இளநீருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தேங்காயும், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது. பல வீடுகளில் சட்னி வைக்க தேங்காய் தான் உதவுகிறது. அதேபோல், பலருக்கும் தேங்காய் தண்ணீர் என்றால் மிகப் பிடிக்கும். ஆனால் அதன் நற்பயன்களை அறியாது, வெறும் சுவைக்காக மட்டுமே குடிப்பார்கள். உண்மையில் தேங்காய் தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா ன? எனக் கேட்டால் பலரும் இல்லை என்று தான் சொல்வார்கள். இருப்பினும், தேங்காய் தண்ணீரை குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்‌. ஏனெனில், அந்த அளவிற்கு அற்புத நன்மைகள் தேங்காய் தண்ணீரில் நிறைந்துள்ளது. 

தேங்காய் தண்ணீரின் நன்மைகள்

  • தேங்காய் தண்ணீரில், நமது உடலுக்குத் தேவையான அத்தனை நன்மைகளும் உள்ளது. தினந்தோறும் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 
  • தேங்காய் தண்ணீரை குடிப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • இரத்த அழுத்தம் அதிகரிக்காது சமநிலையில் இருக்கும்.
  • உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
  • சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். அதிலும் முக்கியமாக, சிறுநீரக கற்களை முற்றிலுமாக நீங்கி விடும்.
  • செரிமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்.
  • வாயு தொல்லைகள் அகலும்.
  • பல் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகளை அனைத்தையும் தீர்க்கும்.
  • பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து நமது உடலைப் பாதுகாக்கும்.
  • தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் சுரப்பியை திறம்பட செயல்பட வைக்கும்.
  • நம் உடலின் வறட்சி பிரச்சனையை சரி செய்து, நீர்ச்சத்து அதிகரிக்கப்படும்.
  • நம் உடலிற்கு பொலிவான தோற்றத்தையும், உடல் ஆற்றலையும் தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் பெற முடியும்.

Latest Videos

undefined

கண் பார்வையை மேம்படுத்தும் கேரட் வைத்து சூப்பரான மில்க்க்ஷேக் செய்வோமா!


எப்படி, எப்போது குடிக்க வேண்டும்?

நம்மில் சிலருக்கு தேங்காய் தண்ணீர் குடித்தால் சளி பிடித்து விடும். இப்படியானவர்கள் தேங்காய் தண்ணீரை மதிய வேளையில் குடிப்பது நல்லது.

தேங்காய் தண்ணீரை அளவோடு குடிப்பதே மிகவும் நல்லது. ஒரு நாளில் 3 முதல் 4 தேங்காயை உடைத்து, அனைத்தையும் குடிப்பது உங்களின் உடலுக்குத் தான் பாதிப்பைத் தரும். ஆகவே, தேங்காய் தண்ணீரை அளவோடு குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதுவே சாலச் சிறந்தது.

 

click me!