
வெந்தயம் செரிமானத்திற்கு உதவும் ஆன்டாசிட்களின் மூலமாகும். எனவே, வெந்தயத்தை ஊறவைத்து, அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வெந்தய நீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவது, அவர்களுக்கு பல்வேறு வகையில் ஊக்கமளிக்கும்.
சரும நலனுக்கு மிகவும் நல்லது
வெந்தய நீர் சருமத்தை மேம்படுத்துகிறது, ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. வெந்தயத்தில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி இருப்பதன் காரணமாக, முகப்பரு மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் போன்ற தோல் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு
வெந்தயத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடைய பிற நிலைமைகளை எளிதாக்க உதவுகிறது. ஆல்கலாய்டுகள் இருப்பதால் மாதவிடாய் சமயத்தில் தோன்றும் வலிகள் குறைந்துபோவதாக மருத்துவ ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பது பெண்களுக்கு பல்வேறு வகையில் பயன் தருகிறது.
பெயரில் தான் இது சின்ன வெங்காயம்- ஆரோக்கியத்தில் இது மிகவும் பெருசு..!!
உடல் எடை குறைப்புக்கு உதவும்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து வெதுவெதுப்பாக்கி குடிக்கலாம். வெந்தயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடல் வெப்பநிலையை உயர்த்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கான அருமருந்து
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது. இதில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது பாலூட்டும் பெண்களுக்கு அதிக பால் உற்பத்தி செய்ய உதவுகிறது. வெந்தய நீர் அல்லது தேநீர் உட்கொள்வது பால் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவுகிறது.