இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து...

 
Published : Nov 14, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து...

சுருக்கம்

Garlic is an excellent medicine to reduce bad cholesterol in blood ...

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதன பொருளாக பயன்படுகிறது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும்,  வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில்  பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டில் “அலிசின்’’ என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கிறது.

** இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது.

** ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை,  முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும்,  குணப்படுத்தவும் உதவுகிறது.

** வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மறையும்.

** இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும்போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு சிறிது ஆற வைத்து  குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு வராது. ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது.

** பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயாக செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

** பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப்பூச மூட்டு வலி குணமாகும். பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர்  தொல்லை நீங்கும்.

** பூண்டின் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

** பூண்டு சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு குணமாகும்.

** குப்பைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.

** பூண்டு, வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

** பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள்நாக்கில் தடவ நாக்கு வறட்சி குறையும்.

** பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிட கீல்வாதம் குணமாகும். வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் நோயின்றி  வாழலாம்

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க