உங்களுக்குத் தெரியுமா? கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது வெந்தயம்...

 
Published : Nov 13, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது வெந்தயம்...

சுருக்கம்

Do you know Dandelion plays an important role in reducing cholesterol ...

வெந்தயத்தில் மருத்துவ குணங்கள்

** வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல்,  வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

** வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர  வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தப்பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

** நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் போலிக் அமிலம், ரிபோபிளேவின் (பி2), வைட்டமின் ஏ, பைரிடாக்சின், வைட்டமின் சி, செலினியம், துத்தநாகம், மாங்கனீஷ், இரும்பு சத்து, தாமிரச்சத்து,  பொட்டாசியம், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

** வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து  காலையில், அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய் கள் குணமாகும். பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

** இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும். பொடுகு பிரச்னை, அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வது நீங்கி தலைமுடி நன்கு வளரும்.

** வெந்தயத்தை கஞ்சியில் சேர்த்து காய்ச்சி கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். கீரையுடன் கோழிமுட்டை, தேங்காய்பால் சேர்த்து சமைத்து உண்டால் இடுப்புவலி தீரும். வெந்தய காபி, வெந்தய தேநீர் குடிக்கலாம். 

** வெந்தயத்தில் ஹைட்ரோ ஐசோலியூசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடிய தன்மை உடையது. 

** தாவர வகைகளிலேயே வெந்தயத்தில் மட்டுமே இந்த அமினோ அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. 

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்