வேலைப் பளுவால் மனநிம்மதி இல்லையா? இந்த உணவுகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும்…

 
Published : Oct 19, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
வேலைப் பளுவால் மனநிம்மதி இல்லையா? இந்த உணவுகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும்…

சுருக்கம்

foods that give good mood

 

மனநிலை புத்துணர்ச்சியுடன் இல்லாமல் இருப்பதற்கு உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹோர்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும். எளிமையாக சொன்னால் அதிகப்படியான வேலைப்பளுவும், கோபமும் தான் காரணம்.

இப்படிப்பட்டவர்களுக்கு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள இந்த உணவுகள் உதவும்.

டார்க் சொக்லெட்

இதில் உள்ள அனடாமைன் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனத்தை அதிகரித்து மூளையின் சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும். மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

முட்டை

முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது. அந்த அமினோ ஆசிட்டுகள் உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை சாப்பிடலாம்.

தேங்காய்

தேங்காயில் நடுத்தர சங்கிலியான ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால் அவை மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் மிகவும் சிறந்தது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாழைப்பழம்

ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. 
அதுமட்டுமின்றி இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது, இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக பாய வைக்கும். அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தக்காளி

தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை தடுக்கும்

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க