
1.. தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
2.. இஞ்சி
நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
3.. மிளகு
நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும்.
4.. நெல்லிக்காய்
கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.
5.. ப்ளாக் டீ அல்லது காபி
ப்ளாக் டீ அல்லது காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.