முகப்பொலிவுக்கு மஞ்சள் தூளைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே ஃபேஸ் பேக் செய்யலாம்...

 
Published : Jan 10, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
முகப்பொலிவுக்கு மஞ்சள் தூளைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே ஃபேஸ் பேக் செய்யலாம்...

சுருக்கம்

Face packs can be done naturally with the yellow turmeric for the facial ...

மஞ்சள் தூள் 

மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கலாம்.  

மேலும் அக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும், தங்கள் அழகைப் பராமரிக்க மஞ்சள் தூளைத் தான் பயன்படுத்தினார்கள். பல அழகுப் பொருட்களில் மஞ்சள் தூளும் ஒரு பொருளாக உள்ளது. 

இயற்கையாந முறையில் வீட்டிலேயே மஞ்சள் தூளைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்று பார்க்கலாம்.

** தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூளை சம அளவில் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

** உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.

** இப்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் முகப்பரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..

** பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.

** மஞ்சள் தூளில் எலுமிச்சை சாற்ளை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் கருத்து போன சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக மாறும். இதனை தினமும் செய்து வந்தால் நாளடைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

PREV
click me!

Recommended Stories

Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு
குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி