மூட்டு வலியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகள் இதோ உங்களுக்காக - பக்கவிளைவு இல்லாததுங்க...

 
Published : Jan 10, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
மூட்டு வலியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகள் இதோ உங்களுக்காக - பக்கவிளைவு இல்லாததுங்க...

சுருக்கம்

Here are some natural treatments that can help you reduce the pain of the joint - for lack of side effects ...

மூட்டு வலி

இன்று பலரையும் அவதிப்படுத்துவது, மூட்டு வலி. இது மூட்டு வலி, மூட்டு அழற்சி (Osteo Arthritist), முடக்கு வாதம் (Rheimatoid Arthristis) என்று இரு வகைப்படுகிறது.

மூட்டு அழற்சி, பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். முடக்கு வாதம், எந்த வயதினருக்கும் வரலாம். இது பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டு வலியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகளைப் பார்க்கலாம்…

** நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி, ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிய உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும.

**ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால்கோப்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

**இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினமும் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

**வெதுவெதுப்பான தேங்காயெண்ணை அல்லது கடுகெண்ணையில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வலி இருக்கும் பகுதியில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டு வலிக்கு உடனடித் தீர்வாகும்.

**‘குதிரை மசால்’ எனப்படும் கால்நடைத் தீவனத்தின் விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு கோப்பை நீரில் கொதிக்கவைத்து, தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை அருந்தலாம்.

**இரண்டு மேஜைக் கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி, ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலை யில் உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

**பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும்.பின் மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். 

**இந்த மருந்தைச் சாப்பிடும்போது காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டு, புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

**ஒரு மேஜைக் கரண்டி பச்சைப் பருப்பு அல்லது பாசிப் பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேக வைத்து ‘சூப்’பாக நாளன்றுக்கு இரு முறை சாப்பிட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு