ஆரஞ்சு, எலுமிச்சையில் இருப்பதை விட அதிகளவு வைட்டமின் சி பப்பாளி பழத்தில் இருக்கு... 

 
Published : Jan 10, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ஆரஞ்சு, எலுமிச்சையில் இருப்பதை விட அதிகளவு வைட்டமின் சி பப்பாளி பழத்தில் இருக்கு... 

சுருக்கம்

Vitamin C is more of a papaya than a lemon.

பப்பாளி

சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். 

பப்பாளியின் அறிவியல் பெயர் ‘காரிகா பப்பாயா’. அதிகபட்சம் 20 அங்குல நீளமும், 12 அங்குல அகல மும் விளையக் கூடியது. 

** மிகக் குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது பப்பாளி. 100 கிராம் பழத்தில் 39 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

** பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன.

** புதிதாக பறிக்கப்பட்ட பப்பாளியில் ‘வைட்டமின் சி’ அதிக அளவில் காணப்படுகிறது. 100 கிராம் பழத்தில் 61.8 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி உடலில் சேர்க்க வேண்டிய ‘வைட்டமின் சி’யில் 103 சத வீதம் 100 கிராம் பப்பாளி உண்பதால் கிடைக்கிறது.

** உடலுக்கு தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது.

** பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது. தோல் வளவளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம். இதர புளோவனாய்டுகள் பல்வேறு நோய்களுக்கு காரணமாகும் ஆக்சிஜன் பிரீரேடிக்கல்களை விரட்டுவதில் பங்காற்றுகிறது. புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும்.

** போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி வழங்கும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்.

** புத்துணர்ச்சி மிக்க பப்பாளி, அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. 100 கிராம் பப்பாளி 257 மில்லிகிராம் பொட்டாசியம் கொண்டுள்ளது. உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புத் தன்மையுடன் விளங்க பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் இது உதவி புரிகிறது.

** பப்பாளி விதைகள் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும், வலியை குறைப்பதிலும் பயன்படுகிறது. வயிற்றுவலி, படர்தாமரை ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு