சிலருக்கு கண்கள் அடிக்கடி துடிக்கும். இவ்வாறு துடிப்பது நன்மையா?தீமையா? என்பதை குறித்து தெளிவாக இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
பொதுவாக சில சமயங்களில் சிலருக்கு கண்கள் துடிப்பது உண்டு. வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் மக்கள் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஆனால் இது நல்லது என்று சொல்வதை விட, கெட்டது என சொல்லலாம் ஏனென்றால், கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவை தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை நிறைய காரணங்கள் உள்ளன.
பரிசோதனை செய்யவும்:
நம் கண்கள் துடிப்பது ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய் விடும். இது சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அது மாதக்கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
undefined
மயோகீமியா:
மருத்துவ துறையில் கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று பெயர். கண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக்கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும்.
கண்கள் தடுப்பதற்கான காரணங்கள்:
நம் கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன அவை, சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பது, குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறண்டு போவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, ஊட்டச் சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, வெகு நேரம் கம்ப்யூட்டரை உற்று பார்ப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் அதிக நேரம் படித்துக் கொண்டேயிருப்பது, மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை ஆகும்.
நீண்ட நாள் கண் துடிப்பது நல்லதா?
தொடர்ச்சியாக கண்கள் துடித்துக் கொண்டேயிருந்தால் நம் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கும். ஆகவே என்ன பிரச்சனை என்பதை கண்டறியவு. நீண்ட நாள் கண் துடிப்பது, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாக இருக்கலாம்.
பிற அறிகுறிகள்:
உங்கள் கண்கள் வெறுமனே துடிப்பதோடு மட்டுமல்லாமல், கண்கள் சிவந்து இருப்பது, கண்களில் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் மேல் இமை தொங்கிக்கொண்டு இருப்பது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்க வேண்டாம். உடனே மருத்துவரிடம் செல்லவும்.
இதையும் படிங்க: கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா? அப்ப தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க! நம்ப முடியாத பலன்கள்
சிகிச்சை:
இவ்வாறு செய்து வந்தால் கண் துடிப்பு தானாக போய்விடும். ஆனால் கண் துடிப்பு நீண்ட நாட்களாக இருந்தால் பொடாக்ஸ் ஊசி செலுத்தி சரி செய்யலாம். அல்லது அறுவை சிகிச்சை மூலம் பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெட்டி எடுக்கலாம். இதனால் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.