எளிதில் தழும்புகளைப் போக்க வீட்டிலேயே இருக்கும் சிறப்பான வைத்திய முறை; பக்க விளைவு இல்லாதது...

First Published Dec 13, 2017, 2:02 PM IST
Highlights
Excellent medical treatment at home to get rid of scars easily No side effect ..


பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். 

ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.

இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. 

என்னதான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.

எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

click me!