குழந்தைகளுக்கு மலச்சிக்கல், ஒட்டுண்ணிப் புழுக்கள் பிரச்னையை நீக்கும் பப்பாளி..!!

By Dinesh TG  |  First Published Jan 1, 2023, 10:10 PM IST

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்தாகவே பப்பாளி உள்ளது. பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
 


குங்குமப்பூ நிறத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை சாப்பிடுவதால், வயிறு சீக்கரமாகவே நிரம்பிவிட்ட உணர்வை தரும். ஆயுர்வேதத்தில் பப்பாளியை வைத்து பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகள் இந்த பழத்தை சாப்பிடுவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புக்கான ஊட்டச்சத்து உடனே கிடைத்துவிடும். அதனால் அவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரம் தாய்ப்பால். இருப்பினும், குழந்தை திட உணவை உண்ணத் தொடங்கும் போது காய்கறிகள் அடிக்கடி உணவில் சேர்க்கப்படுகின்றன. அப்போது அவர்களுக்கு பப்பாளி பழங்களை சாப்பிடக் கொடுக்கலாம். இதன்மூலம் அவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டல் சுறுசுறுப்பு அடையும்.

எப்போது பப்பாளி பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?

Latest Videos

undefined

பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற திட உணவுகளை நான்கு மாதங்களில் இருந்து குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் அவர்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதற்கான உந்துதல் ஏற்படுகிறது. உடல் பருமன், உணவு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் அபாயம் குறைகிறது. பப்பாளியை தாய்ப்பாலுடன் சேர்ந்து கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகள் சரும பராமரிப்பு

பிறந்த குழந்தைகளுக்கும் பல்வேறு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. அப்போது பப்பாளியை கூழாக்கி கொடுத்தால் பல்வேறு பிரச்னைகள் உடனடியாக தீர்ந்துவிடும். பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற பொருட்கள் அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளன. மேலும் குழந்தைகளில் உடலில் பப்பாளிச் சாற்றை தடவும் போது தடிப்புகள், அரிப்புகள் போன்ற பாதிப்பு குறைந்துவிடும்.

தீ புண்களை ஆற்றும்

ஆப்பிரிக்க மருத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, குழந்தைகளுக்கு ஏற்படும் தீக்காயங்களுக்கு பப்பாளி மருந்தாக வழங்கப்படுகிறது. பப்பாளிக் கூழினை தீக்காயங்களுக்குப் பயன்படும் போது சருமம் இலகுவாகிறது. அதிலிருக்கும் பப்பேன் மற்றும் சைமோபாபைன் போன்ற பொருட்கள், இயற்கையாகவே பப்பாளிக்கு ஆண்டிமைக்ரோபியல் செயல்பாட்டை வழங்குகிறது. பழத்தை பிழிந்து, தீக்காயங்களில் தடவினால், காயம் வேகமாக ஆறி, காயத்தில் தொற்று எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மலச்சிக்கலுக்கு தீர்வை தரும்

குழந்தைகளுக்கு நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை என்பது பொதுவானது. அதுதொடர்பான சிகிச்சைக்கு மருந்துகள் மட்டுமல்லாமல், வாழ்க்கைச் சார்ந்த நடைமுறை மாற்றங்கள் தேவைப்படுகிறது. பப்பாளியில் நார்ச்சத்து மற்றும் பப்பேன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இது செரிமான அமைப்பை சிறப்பாக செயல்பட வைக்கிறது. குழந்தைகளின் குடல் இயக்கம் மற்றும் மலம் வெளியேறுவதற்கு பெரிதும் உதவுகிறது.

சக்கரவள்ளிக் கிழங்கில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!!

குடல் புழுக்களை அகற்றும்

ஊட்டச்சத்து குறைபாடு, மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மற்றும் அசுத்தமான உணவை உண்பது போன்றவற்றால் குழந்தைகளுக்கு குடலில் புழுக்கள் உண்டாகுகின்றன. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றன. பப்பாளி மற்றும் அதன் விதைகளில் ஆன்டெல்மிண்டிக் மற்றும் அமீபிக் எதிர்ப்பு பண்புகள் இடம்பெற்றுள்ளன. அவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் மலம் வழியாக ஒட்டுண்ணிகளை அழிக்க உதவுகின்றன. ஒரு ஸ்பூன் பப்பாளி விதை பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், ஓரிரு நாட்களில் குடல் புழுக்கள் தொல்லை நீங்கிவிடும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

தக்காளி மற்றும் கேரட்டை விட பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.பாந்தோதெனிக் அமிலங்கள், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களும் பப்பாளி பழங்களில் காணப்படுகின்றன. இவை இம்யூனோமோடூலேட்டிங் விளைவுகளைக் கொண்டுள்ளன மற்றும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
 

click me!