உங்களுக்கு தெரியுமா? சம்மணங்கால் இட்டு சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு சிறந்தது...

First Published Apr 19, 2018, 2:13 PM IST
Highlights
eating in floor gives health


சம்மணங்கால் இட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...


இரத்த ஓட்டம்!

நமது உடலை இடுப்பை மையமாக வைத்து, கீழ் உடல், மேல் உடல் என இரண்டாக பிரிக்கலாம். இதில் முக்கியமான உடல் உறுப்புகள் பல மேல் உடலில் தான் இருக்கிறது. கீழ் உடலில் கால்கள் மட்டுமே இருக்கின்றன. நடக்கும் போது மட்டும் தான் இரத்த ஓட்டம் கால்களுக்கு தேவைப்படுகிறது. மற்ற வேளைகளில் மேல் உடலில் இருக்கும் கண், காது, மூளை, கணையம், நுரையீரல், சிறுநீரகம், போன்றவைக்கு தான் இரத்த ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது.

சக்தி!

சாப்பிடும் போது கீழே தரையில் சம்மணங்கால் இரட்டு அமர்ந்து உணவு உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது.

காலை மடக்கி அமர்தல்!

காலை மடக்கி அமரும் இந்த நிலை உணவு உட்கொள்வதால், சாப்பிடும் போது மேல் உடலுக்கு தேவையான அளவு இரத்த ஓட்டம் செல்லும். இது மேல் உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கும்.

செரிமானம்!

முக்கியமாக, சம்மணங்கால் இட்டு உணவு உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுபெற்று, செரிமானம் சீராகவும், அஜீரண கோளாறுகள், வயிறு பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.

எனவே, உணவை சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை இன்று முதலே பின்தொடருங்கள்!

click me!