செரிமான பிரச்சனைகளை முழுவதுமாக சீராக்க பாகற்காயை இப்படி சாப்பிடுங்கள்...

 
Published : Jun 04, 2018, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
செரிமான பிரச்சனைகளை முழுவதுமாக சீராக்க பாகற்காயை இப்படி சாப்பிடுங்கள்...

சுருக்கம்

Eat the digestive tract to completely digest the problem ...

பாகற்காய் இருக்கும் மருத்துவ பலன்கள்...

100 கிராம் பாகற்காயில், 25 மில்லி கிராம் கலோரி, 20 மி.கி. கால்சியம், 70 மி.கி. பாஸ்பரஸ், 1.6 சதவீதம் புரதம், 0.2 சதவீதம் கொழுப்பு, 1.8 மி.கி. இரும்புச் சத்து, 0.8 சதவீதம் தாதுக்கள், 88 மி.கி. பி காம்ப்ளெக்ஸ், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 4.2 சதவீதம் கார்போஹைட்ரேட் சத்துகள் உள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், பிளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். 

இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு, பாகற்காய் நல்ல மருந்தாகும்.பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு “கப்” பாகற்காய் “சூப்” எடுத்து, அதில் ஒரு “ஸ்பூன்” எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

சீரான முறையில் பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


 

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!