வெறும் வயிற்றில் பச்சையாக ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள்- அப்புறம் அதிசியம் நடக்கும் பாருங்கள்..!!

By Dinesh TGFirst Published Oct 22, 2022, 11:37 PM IST
Highlights

பச்சை பூண்டை விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வரவேண்டும். அதையடுத்து உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பூண்டு என்றதும், அதனுடைய வாசனை காரணமாக பலரும் முகத்தை திருப்பிக்கொள்வார்கள். இதனுடைய சுவை கசப்பாக இருப்பதால், உட்கொள்வதைக் கூட தவிர்த்துவிடுபவர்கள் உண்டு. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், பூண்டின் வாசனை மற்றும் சுவை மிகவும் முக்கியமானதாகும். 

சமையலறையில் பூண்டு இருப்பது மிகவும் முக்கியம். சில காரமான உணவுகளில் பூண்டு இல்லாவிட்டால் சுவையே இருக்காது. பெரும்பாலான மக்கள் பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். சிலர் பச்சையாகவே பூண்டு சாப்பிடுபவர்களும் உண்டு. பச்சையாக பூண்டை சாப்பிடுவது சற்று கடினம் தான். ஆனால் சாதாரணமாக சாப்பிடுவதைக் காட்டிலும், பூண்டை பச்சையாக சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் பெருமளவில் அதிகரிக்கிறது. பூண்டில் வைட்டமின் பி-6, வைட்டமின்-சி, நார்ச்சத்து, புரதம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. பச்சை பூண்டை விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வரவேண்டும். அதையடுத்து உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பூண்டை எப்படி சாப்பிடுவது?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வரவேண்டும். நன்றாக பூண்டை மென்று, அதனுடைய சாறு வயிற்றுக்குள் உள்ளே இறங்கிவிட வேண்டும். அதையடுத்து வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதால், அதன்மூலம் நமக்கு கிடைக்கும் அல்லிசின் அதிகரிக்கிறது. இதையடுத்து நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பருமனான உடல் எடையை குறைக்க உதவுகிறது. அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நன்மையை வழங்கும்.

இயற்கையான ஆண்டிபயாடிக் பூண்டு

பூண்டுகளில் இயற்கையான ஆண்டிபயாடிக், ஆண்டி வைரல் மற்றும் பூஞ்சை காளானை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக பூண்டு பல தொற்று நோய்களுக்கு எதிராக போராடுவதற்கான மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பூண்டு சேர்க்கப்பட்ட உணவு அல்லது பூண்டை சாப்பிட்டு வருவது சளி, காய்ச்சல், வயிற்று தொற்று, சுவாச தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். நோயால் அவதிப்படுபவர்கள் பூண்டை சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இது நோயாளிகளை விரைவாக குணமடையச் செய்யும்.

மழையில் குளித்தால் உடலுக்கும் கேசத்துக்கு பலன் கிடைக்குமா? ஆய்வு சொல்வது என்ன..??

செரிமானத்துக்கு நல்லது செய்யும்

தினமும் 1 பல் பூண்டை உட்கொள்வது இரைப்பை பிரச்சனைகளை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பூண்டில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடலில் உள்ள பல்வேறு ஒட்டுண்ணி மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளை அழிக்கிறது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளில் பூண்டை தினசரி உட்கொள்வதன் மூலம், நம்முடைய இரைப்புக்கு எதிர்சக்தி கூடுவதும் மற்றும் குடல் நோய் அபாயம் ஏற்படுவதிலிருந்தும் பாதுகாப்பதாக தெரியவந்துள்ளது.

அளவுக்கு மீறினால் கால்களை பதம் பார்க்கும் யூரிக் அமிலம்- கவனம் இருக்கட்டும்..!!

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது

பச்சையாக பூண்டை சாப்பிடுவதால் உடலில் ரத்தக் கட்டிகள் ஏற்படாது. மேலும் ரத்தம் அழுத்தமும் குறைகிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பூண்டு மிகவும் உறுதுணையாக உள்ளது. உடலுக்கு தேவையான நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் H2S போன்ற வாசோடைலேட்டிங் ஏஜெண்டுகளை பூண்டு சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வரவேண்டும். இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க பூண்டை உட்கொள்வதை பெரிதும் பயனளிக்கிறது.
 

click me!