இந்த மாதிரியான சன் கிளாஸை பயன்படுத்துவதால் பார்வையே கூட போகும்னு தெரியுமா?

 
Published : Oct 07, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
இந்த மாதிரியான  சன் கிளாஸை பயன்படுத்துவதால் பார்வையே கூட போகும்னு தெரியுமா?

சுருக்கம்

drawbacks of wearing sun glasses

 

இன்றைய குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் பவர் லெஸ் ஸ்டைல் கிளாஸ் அல்லது சன் கிளாஸ் அணிவது அதிகமாகி வருகிறது. ஆனால், இவை பெரும்பாலும் மலிவான விலையில் விற்கப்படும் தரமற்ற கண்ணாடிகளாகவே இருக்கின்றன.

இவற்றை அணிவதால் பெரிய அளவிலான கண் பிரச்சனைகள் ஏற்படும்.

தரமற்ற கண்ணாடிகளில் பூசப்பட்டிருக்கும் கோட்டிங் மற்றும் வண்ணப்பூச்சு தண்ணீரிலோ, வியர்வையிலோ கரைந்து சருமப் பாதிப்புகளை உண்டாக்கலாம்.

ஃப்ரேம் தரமற்ற பொருளில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மூக்கின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தி காயம், தழும்பு, அலர்ஜியை உண்டாக்கலாம்.

தரமற்ற கண்ணாடிகள் ஜீரோ பவர், பிளாங்க் பவர் எனக்கூறி விற்கப்பட்டாலும், பெரும்பாலான கண்ணாடிகளில் 0.25 என்கிற அளவில் பவர் இருக்கலாம். இதனால், கண்ணில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும் பார்வைத் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

டிரைவிங் செல்லும்போது, கண்கூச்சம், தூசு, கண்களில் நீர் வருவது போன்ற பிரச்சனைகளுக்குச் சிலர் கூலிங் கிளாஸ் (சன் கிளாஸ்) பயன்படுத்துவார்கள்.

அப்படிப்பட்ட கூலிங் கிளாஸைத் தேர்ந்தெடுப்பதற்கு வரைமுறைகள் உள்ளன.

சூரிய வெளிச்சத்திலிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் கண்களின் கருவிழிகளுக்குள் இருக்கும் பாப்பா (pupil) விரிவடைந்து, அதனுள் சூரிய ஒளிக்கதிர்கள் சென்று, கண் நரம்புகளைப் பாதிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.

இந்தப் பாதிப்பைத் தடுக்க, `யுடிலிட்டி’ வகை சன் கிளாஸைப் பயன்படுத்தலாம். அந்தக் கண்ணாடியில் ‘யுவி புரொடெக்‌ஷன் 100%’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குவது அவசியம்.

கண்ணாடியைத் தேர்வு செய்யும் முன்

டேநைட் கிளாஸ் எனப்படும் போட் டோக்ரோமிக் (Photochromic), போலரைஸ்டு (Polarized), ARC எனப்படும் ஆன்டி ரிஃப்ளெக்டிவ் கோட்டிங் (Anti reflective coating) கிளாஸ்கள் உகந்ததவை.

உங்கள் கண்ணுக்கு எந்த வகை, எந்த சைஸ் கண்ணாடி பொருத்தமாக இருக்கும், ஜீரோ பவர் உள்ளதா, தரமான மெட்டீரியலால் செய்யப்பட்டதா என்பனவற்றை உறுதிசெய்து விட்டே வாங்க வேண்டும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த வகைக் கண்ணாடியும் அணிவிக்காமல் இருப்பதே நல்லது. அவர்களுக்குக் கண் சிறியதாக இருக்கிற இந்தக் காலகட்டத்தில், கண்களை நன்றாக விழித்து அனைத்துப் பொருள்களையும் பார்க்க வேண்டியது அவசியம். மாறாக, அவர்கள் கண்ணாடி அணிந்தால், கண்களை விழித்துப் பார்ப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். அதனால், பார்வைத் திறனிலும் பாதிப்பு ஏற்படலாம்.

வெயிலில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்குத் தரமான யுவி புரொடெக்‌ஷன் கண்ணாடி அணிவிப்பது நல்லது.

பாதிப்புகள் என்ன?

ஸ்டைலுக்காக அணியும் கண்ணாடிகள் சீரற்ற வடிவம் மற்றும் பல வண்ணங்களைக் கொண்டிருப்பதால், அவற்றை அணிந்து பார்க்கும்போது பொருள் சீராகத் தெரியாமல், ஒளிச்சிதறலை ஏற்படுத்தும்.

இந்த ஒளிச்சிதறல் தொடர்ந்து ஏற்பட்டால், கண்ணுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் தலைவலி, கண்ணில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் கோளாறுகள், கண் எரிச்சல், கண் கூச்சம் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். படிப்பில் குழந்தைகள் கவனம் செலுத்த முடியாமல் போக நேரிடலாம்.

அழகுக்காகப் பயன்படுத்தும் கண்ணாடிகளே நமக்கு ஆபத்தாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க