முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா? உண்மையில் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்?

By Ramya s  |  First Published Sep 23, 2023, 5:47 PM IST

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.


உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டையில் புரதம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் டி, செலினியம் மற்றும் அயோடின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கோலின், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றில் நிறைந்துள்ளது, இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளதா, சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

Tap to resize

Latest Videos

கொலஸ்டாரால் என்பது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் அதாவது நல்ல கொலஸ்ட்ரால் என்று இரு வகை உள்ளது. உண்மையில், ஆரோக்கியமான செல்களை உருவாக்கவும், ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை உருவாக்கவும் கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால் உங்கள் உடலில் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் பிரச்சனை ஏற்படுகிறது.

அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சி கல்லீரலுக்கு கொண்டு சென்று வெளியேற்றுகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறுகிறது. இதனால்தான் கொலஸ்ட்ரால் இருதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அந்த வகையில் முட்டைகளிலும் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது, ஆனால் அவை ஆரோக்கியமற்றவை அல்ல, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற உணவுகளில் இருக்கும் கொலஸ்ட்ராலில் இருந்து வேறுபட்டவை என்கின்றனர் மருத்துவர்கள்

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு நல்ல கொலஸ்ட்ரால் இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது, இது உண்மையில் இருதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஜர்னல் நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2018 ஆய்வில் பெரும்பாலான பங்கேற்பாளர்களுக்கு முட்டை உட்கொள்ளல் கொலஸ்ட்ராலில் ஒரு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, 50 நாடுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்து 1.7 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பார்த்தது. முட்டை நுகர்வு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள், இறப்பு விகிதங்கள் அல்லது முக்கிய இருதய நோய் நிகழ்வுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும்?

ஒரு பெரிய முட்டையில் சுமார் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இது மஞ்சள் கருவில் உள்ளது. ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு முட்டையையும் கூடுதல் முட்டையின் வெள்ளைக்கருவையும் சாப்பிடலாம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு 2-7 முட்டைகளை சாப்பிடுவது நல்ல கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை குறைக்க உதவுகிறது, அதேசமயம் ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகள் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பதும் தெரிய்வந்துள்ளது. முட்டையில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும், அது இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. 

click me!