காலையில் அரிசிச் சோறு சாப்பிடுபவரா நீங்கள்..?? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

By Asianet Tamil  |  First Published Feb 8, 2023, 12:10 AM IST

பலர் காலை உணவாக அரிசிச் சோறு சாப்பிடும் பழக்கம் பலரிடையே உள்ளது. ஆனால் காலை நேரத்தில் வெறும் சோறு மட்டும் சாப்பிடுவது நல்லது கிடையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமைத்த அரிசி சாப்பிடுவது பற்றி சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
 


காலையில் நாம் உண்ணும் உணவு நம் உடலை உற்சாகப்படுத்த வேண்டும். பொதுவாக இந்திய சமையலறைகளில்  இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவை காலை உணவாக சமைக்கப்படுகிறது. வெகு சில நாட்களில் வென்பொங்கல் அல்லது உப்புமா அல்லது கிச்சடி போன்ற உணவுகள் சமைக்கப்படுகின்றன. எனினும் இதற்கிடையில் பல்வேறு குடும்பத்தினர் காலை வேளையில் அரிசிச் சோறு வடித்து சாப்பிடுகின்றனர். வடகிழக்கு இந்தியாவின் சில மாநில மக்கள் காலையில் சோறு சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஜப்பான் போன்ற சில நாடுகளில் காலை உணவாகவும் சோறு உண்ணப்படுகிறது. அரிசி நம் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். மேலும் வலுவாக வைத்திருக்கிறது. இருப்பினும், காலையில் சோறு சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். இதுகுறித்து நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என்று பார்க்கலாம்.

காலையில் சோறு சாப்பிடலாம்

Tap to resize

Latest Videos

சோறு சாப்பிடாவிட்டால் வயிறு நிரம்பியதாக எண்ணுபவர்கள் ஏராளம். ஆனால் உடல் எடை அதிகரிப்பதாலோ.. அல்லது வேறு காரணத்தினாலோ பலர் காலையில் சோறு சாப்பிடுவது கிடையாது. ஆனால் நிபுணர்கள் காலையில் சோறு சாப்பிடுவதை ஆமோதிக்கவே செய்கின்றனர். அதாவது அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. வல்லுனர்கள் அதை ஆற்றல் சக்தி என்று அழைக்கிறார்கள். பட்டாணி, பீன்ஸ், கேரட், கீரை, சுரைக்காய் போன்ற காய்கறிகளுடன் சோறு சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். 

எப்போது சோறு சாப்பிடலாம்?

டலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகளில் பெரும்பாலானவற்றை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் உணவு சாப்பிடுவது நன்மையை தரும். இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. ஆனால், அரிசியை அளவோடும் சரிவிகித உணவின் ஒரு பகுதியாகவும் உட்கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பூண்டு மற்றும் முட்டை வறுத்த அரிசி

பசியைத் தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில் இது சுவையாகவும் இருக்கும். இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த முழு உணவிலும் கலோரிகள் குறைவாக உள்ளது, குறிப்பாக பூண்டில் இருந்து பெறப்படும் அல்லிசின் என்ற பொருளின் காரணமாக, உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. பூண்டு ஆன்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும். முட்டையில் இதய ஆரோக்கியம் நிறைந்த நிறைவுறா கொழுப்புகள் அதிகம் உள்ளன.

ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஒரு பழம் போதும்..!!

ஜஃப்ரானி புலாவ்

இந்த உணவு பாஸ்மதி அரிசி, பருப்புகள், குங்குமப்பூ, பால் மற்றும் கிரீம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது மிக மிக சுவையான காலை உணவாகும். இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இது உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்க உதவுகிறது.

பசந்தி புலாவ்

மிஷ்டி புலாவ் என்றும் அழைக்கப்படும் பசந்தி புலாவ் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. முந்திரியில் சர்க்கரை குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகம். இதில் அதிக அளவு தாமிரம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இதை காலையில் உட்கொள்வதன் மூலம் மூளை ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி அடைகின்றன.
 

click me!