பூண்டுடன் பால் கலந்து குடிப்பதனால், பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும் என நாட்டு மருத்துவத்தில் கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால் அதில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இந்த முறை சிலருக்கு ஆரோக்கியமாக இருந்தாலும், பலருக்கு அது தீங்கை விளைவிக்க கூடியதாக இருக்கிறது.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பொருளாக உள்ளது. வெறும் வயிற்றில் தினம் ஒரு பூண்டு பல்லை சாப்பிட்டு வந்தால் பல அரிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். பூண்டுடன் பால் கலந்து குடிப்பதனால், பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும் என நாட்டு மருத்துவத்தில் கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால் அதில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இந்த முறை சிலருக்கு ஆரோக்கியமாக இருந்தாலும், பலருக்கு அது தீங்கை விளைவிக்க கூடியதாக இருக்கிறது.
பாலில் பூண்டு சேர்த்தல்
undefined
பாலில் பூண்டைச் சேர்த்து குடிப்பதால், பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பாலில் கலக்கும் போது, அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒருசிலரது உடலுக்கு இது நன்மையை அளிக்கிறது என்றாலும், சிலரது உடலுக்கு இது ஏற்றதாக இல்லை. அந்த வகையில் பூண்டுடன் பால் சேர்த்து குடிப்பதால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
பக்க விளைவுகள்
பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும் என்பதால், பூண்டை பாலில் கலந்து குடிப்பதை தவிர்த்து விட வேண்டும்.
பூண்டுடன் பால் கலந்து குடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படக் கூடும். பூண்டில் இருக்கும் சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்கும் என்பதால், தோல் எரிச்சல், தோல் அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
Curry Leaves: கறிவேப்பிலையை இப்படிப் பயன்படுத்தி பாருங்கள்: பன்மடங்கு நன்மை அளிக்கும்!
பூண்டுடன் பால் சேர்த்துக் குடித்தால், இரத்த அழுத்தம் மோசமடையும் அபாயமும் உள்ளது. ஏனென்றால், பூண்டு பால் சில சமயங்களில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
பூண்டு மற்றும் பால் ஆகிய இரண்டையும் கலந்து குடிப்பது சில நேரங்களில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
பூண்டு பால் குடிப்பதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பூண்டு மற்றும் பால் ஆகிய இரண்டும் தலைவலிக்கு காரணம் இல்லை எனினும், இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பதால் தலைவலிப் பிரச்சனை ஏற்படும்.
இது நாள் வரை நீங்களும் பூண்டு பாலை குடித்து வந்திருந்தால், பூண்டையும் பாலையும் கலந்து குடிப்பதை இன்றோடு நிறுத்தி விடுங்கள். இது பல பிரச்சனைகளைத் தடுக்கும். பால் மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் தனித்தனியாக சிறிது நேரம் இடைவெளி விட்டு சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.