உங்களுக்குத் தெரியுமா? இருமல், சளி, வயிற்று வலி மூன்றுக்கும் ஒரே தீர்வு ஓமம் – கற்பூரவல்லி இலை சூப்…

First Published May 24, 2017, 1:48 PM IST
Highlights
Do you know this remedy cures caugh stomach pain


இருமல், சளி, வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் செய்து பருகலாம்.

இன்று இந்த சூப்பை எப்படி செய்வது...

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலை – 10,

ஓமம் – 2 டீஸ்பூன்,

சீரகம் – 2 டீஸ்பூன்,

தனியா – 2 டீஸ்பூன்,

மிளகு – 4 எண்ணிக்கை,

சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),

இஞ்சி – 1 துண்டு,

பூண்டு – 4 பல்,

சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),

உப்பு – தேவைக்கு,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),

வெற்றிலை – 4,

நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே வைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் வதக்கிய பின்னர் அதில் வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடிகட்டி பருகவும்.

ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

இந்த ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் குடித்தா சளி, இருமலை குணமாகும்…

click me!