
உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டைபோடும் குணம் கொண்ட பழம் கொய்யாப்பழம். கொய்யாவிலிருக்கும் லைகோபென் சத்துதான் இந்த சண்டையில் ஹீரோ.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வல்லமை கொண்ட கொய்யாக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப் பழங்கள் சாப்பிட்டு வந்தால் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையுமே கண்டு அலறுவார்கள். ஆனால், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும்.
அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து.
வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது. வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள், அதற்குப் பதிலாக பக்க விளைவற்ற கொய்யாவை சாப்பிடலாம்.
சளித் தொல்லையில் இருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியானது.
பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர்களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறவர்களும் கொய்யாவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.