40 வயசுக்கு மேல் ஜாக்கிங்கா? ஜாக்கிரதையா இருங்க…

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
40 வயசுக்கு மேல் ஜாக்கிங்கா? ஜாக்கிரதையா இருங்க…

சுருக்கம்

40 வயதிற்கு மேல் ஜாக்கிங் செய்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏன் தெரியுமா?

சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பர. அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்.

இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் செய்வது தான்.

மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்;

இரத்த அழுத்தம்,ஈரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு.

ஜாக்கிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்சனை வராது.

திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாக்கிங் பாதிக்கும்.

ஜாக்கிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும்.

எனவே, நாற்பது வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்ய மருத்துவரிடம் அனுமதி பெறுவது நல்லது.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!